நம் நாட்டு நிறுவனம் ஒன்று ஸ்மார்ட் போன் சந்தையில் அடியெடுத்து வைப்பதாக அறிவித்திருக்கிறது. நிறுவனத்தின் பெயர் சன் ஏர்வாய்ஸ். அது தயாரிக்க இருக்கும் பிராண்டின் பெயரும் புதிதாகத்தான் இருக்கிறது; ஜியாக்ஸ் (Ziox.).
சாதாரண போன் மற்றும் ஸ்மார்ட் போன் இரண்டையும் தயாரிக்க இருப்பதாகக் கூறியுள்ளது இந்த டெல்லி நிறுவனம்.
இந்த மாத இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் இந்த போன்கள் சந்தைக்கு வர உள்ளன. இவை முதலில் சில மாநிலங்களில் வலம் வந்து அதன் பிறகு நாடு முழுவதும் அறிமுகமாக உள்ளன.
போன்களின் விலை ரூ.7,000க்கும் குறைவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ள நிறுவனம் இங்கிருந்து சர்வதேசச் சந்தைக்கு விரிவாக்கம் செய்ய உள்ளதாம்.