மைக்ரோசாப்ட் லூமியா வரிசை அறிமுகங்கள் சந்தையில் வரிசைகட்டுகின்றன . ஏற்கெனவே லூமியா 435, லூமியா 532, லூமியா 640, லூமியா 640 எக்ஸ்.எல் ஆகிய போன்கள் அறிமுகமாகியிருக்க சமீபத்தில் லூமியா 540-ம் அறிமுகமானது. இந்நிலையில் மேலும் 4 புதிய போன்கள் வர உள்ளன. நோக்கியா பவர் யூசர்ஸ் இணையதளம் இந்தத் தகவலைத் தெரிவிக்கிறது.
லூமியா 940 மற்றும் லூமியா 940 எக்ஸ்.எல் ஆகிய மாதிரிகள் தவிர இடைப்பட்ட விலைப்பிரிவில் இரண்டு மாதிரிகளும் அறிமுகமாக இருப்பதாகத் தெரிகிறது.
லூமியா 940 ஐந்து அங்குல டிஸ்பிளே கொண்டிருக்கும். இரண்டாவது மாதிரி கூடுதலாக 5.7 அங்குல டிஸ்பிளேயைக் கொண்டிருக்குமாம். தற்போதுள்ள 20 மெகாபிக்சல் காமிராவைவிடப் பெரிய காமிரா இருக்கும் எனத் தெரிகிறது.
இவை மட்டுமா, முப்பரிமாணத் தொடர்பும், ஐரிஸ் ஸ்கானர் ஆகியவையும் கொண்டிருக்கும். மற்ற இரண்டு போன்களும் லூமியா 830-க்கு நிகரான வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து மெகாபிக்சல் செல்ஃபி காமிராவும் நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.