ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் நிச்சயம் பவர் பேங்கின் தேவையை உணர்ந்திருப்பார்கள். எதிர்பாராத நேரத்தில் சார்ஜ் தீர்ந்துபோகும்போது கைகொடுப்பவை இவை என்பதுதான் காரணம். இந்தப் பிரிவில் இப்போது ஜீப்ரானிக்ஸ் புதிய பவர் பேங்குகளை அறிமுகம் செய்துள்ளது.
ZEB-PG10000 மற்றும் ZEB-PG2200+ அறிமுகமாகியுள்ளன. பேட்டரி ஆயுள் பிரச்சினைக்குத் தீர்வாக 10,000mAh பேட்டரியை அறிமுகம் செய்துள்ளது. இந்தச் சாதனங்கள் மூலம் சராசரி மொபைல் போனை மூன்று மடங்கு சார்ஜ் செய்து கொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் மாதிரி இரட்டை யுஎஸ்பி போர்ட் மற்றும் 2ஏ அவுட்புட் கொண்டுள்ளது. இதில் பேட்டரி அளவைக் காட்டும் இண்டிகேட்டரும் உள்ளது. இரண்டாவது மாதிரி அதிக சக்தி கொண்டதாகும். ஆனால் சிறியது மற்றும் எடை குறைவானது.
இரண்டிலுமே டார்ச் லைட் வசதி உண்டு. சார்ஜ் செய்வதற்கு வசதியாக மைக்ரோ யுஎஸ்பி டு யுஎஸ்பி கேபிளுடன் வருகின்றன. பாதுகாப்பான அம்சங்களைக் கொண்டிருப்பதாக நிறுவனம் சொல்கிறது.