ப்ளீன் என்கிற நிறுவனம் இந்த 3டி புரஜெக்டரை தயாரிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது. சற்றே பெரிய சைஸ் முட்டை வடிவத்தில் இருக்கும் கருவியிலிருந்து மேல்நோக்கி வீசும் ஒளிக்கற்றைகள் விர்ச்சுவலாக ஒளிப்படங்களைக் காட்டும்.
உதாரணமாக ஒரு திரைப்படத்தையோ அல்லது டிவி சேனலையோ பார்க்க வேண்டும் என்றால் எந்த விதமான ஸ்கிரீனும் தேவையில்லை. அதாவது கிட்டத்தட்ட கண் எதிரே விர்ச்சுவல் மனிதர்கள் 3டி எஃபெக்டில் காட்சிகளாகத் தோன்றுவார்கள்.
நமக்கு பிடித்தமான நபர்களுக்கு பக்கத்தில் இருப்பதுபோல உணர்வோம்.
எலெக்ட்ரிக் கார்
டொரோய்டியன் என்கிற எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் எதிர்கால எலெக்ட்ரிக் கார் வடிவமைப்பை வெளியிட்டுள்ளது. 1 எம்டபிள்யூ என்று இந்த காருக்கு பெயரிட்டுள்ளனர்.
பேட்டரி நீண்ட நேரத்துக்கு தாக்குபிடிக்கும் என்றும், எடை குறைவாக இருக்கும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.