யோட்டோ போனி இரட்டைத் திரை அம்சத்தை மற்ற ஸ்மார்ட் போனிலும் கொண்டுவர வழி இருக்கிறது. இன்க் கேஸ் பிளஸ் (InkCase Plus) தான் அந்த வழி. இங்க் கேஸ் பிளஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கான கேஸ் போன்றது. இதுவே இன்னொரு திரையாகவும் இருக்கும். பிரதான திரையில் பேட்டரியை மிச்சம் செய்ய இதைப் பயன்படுத்தலாம். டிஸ்பிளேவில் நோட்டிபிகேஷன் தெரியும். முக்கிய செயலிகளைப் பயன்படுத்தலாம். புகைப்படங்களைப் பார்க்கலாம். மின்னூல்களைப் படிக்கலாம். 3.5 அங்குல அகலம் கொண்டது. இதிலேயே பேட்டரி உள்ளது. ப்ளூடூத் வசதியும் உண்டு.
தனியே மின்னூல் வாசிப்பாகவும் ( இபுக் ரீடர்) பயன்படுத்தலாம். ஸ்மார்ட் போனுக்கான பாதுகாப்பாகவும், இரண்டாம் திரையாகவும் இருக்கும். தனியாகவும் பயன்படுத்தலாம், பிட்கேசுடன் சேர்ந்தும் பயன்படுத்தலாம். கிக்ஸ்டார்ட்டர் இணைதளம் மூலம் கடந்த ஆண்டு அறிமுகமான இது இப்போது பொதுவான பயனாளிகளுக்கும் விற்பனைக்கு வந்திருக்கிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த ஆகிசிஸ் ( Oaxis) நிறுவனத் தயாரிப்பு; இதற்கான துணைச் செயலியும் இருக்கிறது.
மேலும் தகவல்களுக்கு: >http://www.oaxis.com/shop/product_detail.php?id=16