அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் கையடக்க ஸ்கேனர் கருவியை கொண்டுவந்துள்ளது. இந்த கருவியை கம்ப்யூட்டர், லேப்டாப் அல்லது மொபைல் போனுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இந்த கருவியை ஸ்கேன் செய்ய வேண்டிய புத்தகம் அல்லது படத்தின் மீது வைத்து கைகளால் நகர்த்த வேண்டும். நாம் ஸ்கேன் செய்வது அப்படியே இணைப்பிலுள்ள கணினிக்கு வந்துவிடும்.
ஒயர்கள் இணைப்பில்லாமல் வை-பை முறையில் இந்தக் கருவி இயங்குகிறது. நாம் ஸ்கேன் செய்யும் படத்தில் உள்ள வண்ணத்தை விட அடர்த்தி குறைவாகவோ அல்லது அதிகமாகவோ வேண்டும் என்றால் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.
எல்ஜி-யின் நவீன திரை
எல்ஜி நிறுவனம் எதிர்காலத்தில் தயாரிக்க உள்ள பிளக்ஸிபள் டிஸ்பிளே வை வெளியிட்டுள்ளது. இந்த டிஸ்பிளே பேனலை அப்படியே பாய் போல சுருட்டிவிட முடியும். 18 அங்குலம் கொண்ட இந்த டிஸ்பிளே பேனல் ஓஎல்இடி முறையில் இயங்கக்கூடியது. 2017ல் இந்த வகை மாடல்களை விற்பனைக்குக் கொண்டுவர எல்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தற்போது 18 அங்குல அளவில் அறிமுகப்படுத்தபட்டுள்ள இந்த டிஸ்பிளே பேனலை 2017-ல் 60 அங்குலம் வரையிலும் அறிமுகப்படுத்த உள்ளோம் என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த டிஸ்பிளே பேனல்கள் விற்பனைக்கு வந்துவிட்டால் டிவி வைத்துக்கொள்ள இடம் அடைக்கிறதே என கவலைப்பட தேவையில்லை. சுவற்றில் ஒரு பேப்பரைபோல ஒட்டிவிடலாம்.