தொழில்நுட்பம்

3டி மருத்துவ அறிக்கை

செய்திப்பிரிவு

மருத்துவத்துறையில் மாபெரும் புரட்சியைக் கொண்டுவர உள்ளது முப்பரிமாண (3டி) தொழில் நுட்பத்திலான மருத்துவ அறிக்கை.. பக்கம் பக்கமான மருத்துவ அறிக்கைகள் கொண்டு நோயாளியின் உடற்கூறுகளை தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

3டி முறையில் ஆய்வு செய்து அதையே மருத்துவ அறிக்கையாகக் கொடுக்கப்படும். அதாவது தலையை ஸ்கேன் செய்ய வேண்டும் என்றால் தலையில் ஹெல்மெட் போன்ற வடிவமைப்பை பொருத்தி ஸ்கேன் செய்து விடுவார்கள். இதைக் கொண்டு தலையின் எந்த பாகத்தில் என்ன நடக்கிறது என்பது ஆய்வு செய்யப்படும்.

உடலின் மற்ற பகுதிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றால் அது போல பிளேட்கள் பொருத்தி ஆய்வு செய்து கொள்ளலாம். இதையே மருத்துவ அறிக்கையாக எடுத்துக் கொண்டு அதற்கேற்ப மருத்துவம் செய்யப்படும்.

அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ கருவிகள் தயாரிக்கும் நிறுவனம் இதை வெளியிட்டுள்ளது. தற்போது அறிமுகக் கட்டத்தில் இருப்பதாகவும், 2020-ம் ஆண்டுகளில் இது போன்ற 3டி மருத்துவ அறிக்கைகள் முழுமையாக நடைமுறைக்கு வருமென்று நம்புவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இனிமேல் ஸ்கேன், எக்ஸ்ரே, இசிஜி என ஆளை பயமுறுத்தும் கருவிகளிலிருந்து நோயாளிக்கு விடுதலை கிடைக்கும் என நம்பலாம்.

SCROLL FOR NEXT