முன் பக்கம், பின் பக்கம் என இரட்டை காமிராக்கள் கொண்ட ஸ்மார்ட் போன்கள் இன்று சந்தையில் குவிகின்றன. செல்ஃபி மோகம் உச்சத்தை எட்டிய ஏற்படுத்தியுள்ள நிலையில், காதலர்களின் திருமணக் கோரிக்கை தருணங்களை அற்புதமாகப் படம் பிடித்துத் தருவதற்காக என்றே மோதிர காமிரா அறிமுகமாகியுள்ளது.
ரிங்காம் எனும் பெயரிலான இந்த மோதிரத்தின் பெட்டியில் மேல் பகுதியில் காமிரா இருக்கிறது. மேலே உள்ள பட்டம் மூலம் இந்தக் காமிராவை இயக்கலாம்.
ஆக, காதலன் காதலியிடம் மோதிரத்தைக் கொடுத்து என்னை மணந்து கொள்ளச் சம்மதமா எனக் கேட்கும் போதே காமிரா பட்டனை இயக்கினால், காதலியின் ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தை அப்படியே வீடியோ காட்சியாகப் படமாக்கிக் கொள்ளலாம்.
இந்தப் படத்தை நேராகக் கணினியில் மாற்றிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. இந்த மோதிர காமிராவை 100 டாலருக்கு 3 வார காலம் வாடகைக்கு எடுக்கலாம். வசதி இருந்தால் 1499 டாலருக்கு விலைக்கும் வாங்கிக்கொள்ளலாம் என்றும் நிறுவனம் தெரிவிக்கிறது.
மோதிர காமிராவின் இணையதளம் : >http://getringcam.com/