கார்பன் நிறுவனம் தனது டைட்டானியம் ஸ்மார்ட் போன் வரிசையில் டைட்டனியம் மேக் டு ( Titanium Mach Two) என்ற புதிய போனை அறிமுகம் செய்துள்ளது. 112 கிராம் எடை கொண்ட இது கோரிங் கொரில்லா க்ளாஸ் 3 கொண்டுள்ளது. இதனால் கீறல் விழ வாய்ப்பில்லை!
ஐந்து அங்குல டிஸ்பிளேவுடன் எட்டு மெகாபிக்சல் முன் பக்க காமிராவும் பின் பக்க காமிராவும் இருக்கின்றன. 1.4GHz ஆக்டா கோர் பிராசஸர் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4. வர்ஷன் என்றாலும் ஆண்ட்ராய்டு லாலிபாப்புக்கு மேம்படுத்திக்கொள்ளலாம். எட்டு ஜிபி சேமிப்புத்திறன் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு வசதியும் கொண்டுள்ளது. இரட்டை சிம்முடன் அடர் நீல நிறத்தில் கிடைக்கிறது. விலை. ரூ. 10,490.