தொழில்நுட்பம்

மெய்சூவின் சாதனை

சைபர் சிம்மன்

கடந்த மாதம் மட்டும் 15 லட்சம் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்திருப்பதாக சீன ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான மெய்சூ சீனத்து டிவிட்டர் சேவையான வெய்போபிவில் தெரிவித்துள்ளது.

மெய்சூ எம்.எக்ஸ்4 மற்றும் எம்.எக்ஸ் ப்ரோ ஆகிய இதன் ஸ்மார்ட் போன்கள் பிரபலமாக உள்ளன. ஜியோமியை எதிர்கொள்ள இது பட்ஜெட் விலையில் மெய்சூ எம்1 மற்றும் எம் நோட் ஆகிய மாதிரிகளையும் அறிமுகம் செய்துள்ளது. மெய்சூ 1 சமீபத்தில் ஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் முன்பதிவுகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே இன்னொரு முக்கிய நிகழ்வாக சீன மின் வணிக ஜாம்பவான் அலிபாபா நிறுவனம் மெய்சூ நிறுவனத்தில் 5 கோடி 900 லட்சம் டாலர் அளவுக்கு முதலீடு செய்திருக்கும் செய்தியும் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT