தொழில்நுட்பம்

ஸ்மார்ட் போன் பற்று

சைபர் சிம்மன்

ஸ்மார்ட் போன் மோகம் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது ஸ்மார்ட் போன் பற்று குறித்து ஆய்வாளர்கள் கண்டறிந்து கூறியுள்ளார்கள். ஐஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் லாவ்பரோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், ஸ்மார்ட் போன்கள் மனிதர்களின் பழக்கவழக்கத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாகவும், பயனாளிகள் அவற்றுடன் உணர்வுபூர்வமாக ஒன்றிவிடுவதாகவும் தெரியவந்துள்ளது. ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு பலவற்றை எளிமையாக்கி இருப்பதோடு செயலிகள் மற்றும் சமூக வலைப்பின்னல் பயன்பாடு அவற்றின் மீது உணர்வு சார்ந்த பிடிப்பை உண்டாக்கிவிடுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக் கழக மருத்துவப் பள்ளி பேராசிரியர் ஜென்னி ரடேஸ்கி வேறொரு ஆய்வு மேற்கொண்டார். அதில் குழந்தைகளிடம் ஸ்மார்ட் போன், டேப்லெட் போன்றவற்றைப் பயன்படுத்தக் கொடுப்பது அவர்களின் சமூக வளர்ச்சியைப் பாதிக்கலாம் எனக் கண்டறியப்பட்டது. எப்படித் தொலைக் காட்சி பார்ப்பது பிள்ளைகளின் சமூக உறவு ஆற்றலைப் பாதிக்கிறதோ அதே பாதிப்பை நவீன கேட்ஜெட்கள் உண்டாக்குவதாகவும் அவர் சொல்கிறார்.

SCROLL FOR NEXT