சறுக்கு விளையாட்டான ஸ்கேட்டிங்கிலும் தொழில்நுட்பம் வந்துள்ளது. இந்த ஸ்கேட்டிங் போர்டில் வாகன வேகத்துக்கு ஈடாக ஒரு நபர் பயணிக்க முடியும் என்கிறது இதை தயாரித்துள்ள நிறுவனம். இந்த ஸ்கேட்டிங் கருவியில் சக்கரங்கள் கிடையாது. புவி ஈர்ப்பு விசைக்கு எதிரான தொழில்நுட்பத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
கருவியை கீழே வைத்தால் தரையிலிருந்து சற்ற மேலெழும்பி மிதந்துக் கொண்டிருக்கும். இதில் ஆள் ஏறி நின்றாலும் தரையில் படாமல் மிதக்கும். இதை ஸ்கேட்டிங் செய்வது போல உந்தித்தள்ளி போக வேண்டியதுதான். இந்த கருவி காந்த விசையின் மூலம் இயங்குகிறது. எதிர்காலத்தில் சக்கரமில்லா வாகனங்கள் தயாரிக்க இந்த தொழில்நுட்பம் முன்னோடியாக அமையும் என்கின்றனர் தொழில்நுட்ப உலகினர்.