ஆண்ட்ராய்டு போனில் பாட்டு கேட்ட அனுபவம் பெரும்பாலானோருக்கு இருக்கலாம்.
ஆனால் ஆண்ட்ராய்டு இசைக் குழு பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஜப்பானில் இப்படியொரு ஆண்ட்ராய்டு இசைக் குழுவின் நிகழ்ச்சி நடந்திருக்கிறது.
கூகுளின் ஜப்பான் ஊழியர்கள் 300 ஸ்மார்ட் போன்களைக் கொண்டு இந்த இசைக் குழுவை உருவாக்கி அவை ஒவ்வொன்றையும் மேற்கத்திய இசை மேதை பீத்தோவனின் ஒரு சிம்பனி கீதத்தை ஒரே நேரத்தில் இசைக்க வைத்துள்ளனர்.
இந்த ஸ்மார்ட் போன் ஒவ்வொன்றிலும் ஒரு விதமான ஆண்ட்ராய்டு லோகோ சித்திரம் உருவாக்கப்பட்டிருந்தது.
சிம்பனி இசைக்கப்பட்டபோது இந்த லோகோ சித்திரங்களும் சேர்ந்து ஆட அதற்கேற்ப ஸ்மார்ட் போன்களில் விளக்குகளும் மின்னும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. டோக்கியோ நகரில் இரண்டு நாட்களுக்கு இந்த இசை நிகழ்ச்சி கண்காட்சியாக நடத்தப்பட்டது.
டோக்கியோவில் இல்லாதவர்கள் கவலைப்பட வேண்டாம். இந்த ஆண்ட்ராய்டு இசைக் குழுவின் நிகழ்ச்சி யூடியூப் வீடியோவாகப் பதிவேற்றப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு பயனாளிகளில் தங்களுக்கான பிரத்யேக லோகோ சித்திரங்களை உருவாக்க அமைக்கப்பட்ட ஆண்ட்ராய்டிபை (>https://www.androidify.com/en/#/) தளம் மூலம் இந்த இசைக் குழுவின் 300 போன்களுக்கான உருவங்களும் தயார் செய்யப்பட்டன. நீங்களும்கூட உங்களுக்கான ஆண்ட்ராய்டு சித்திரத்தை உருவாக்கிக்கொள்ளலாம்.
ஆண்ட்ராய்டு இசைக் குழு வீடியோவைப் பார்க்க; >http://googleasiapacific.blogspot.in/2015/02/japans-singing-androids.html