புதிதாக ஸ்மார்ட் போனை வாங்க வேண்டும் என விருப்பம் இருந்தாலும் எந்தப் போனை வாங்குவது எனத் தெரியாமல் குழப்பம் இருக்கிறது. இதற்குத் தீர்வாகப் பிராடக்ட் சார்ட் இணையதளத்தில், பெரும்பாலான ஸ்மார்ட் போன்களின் விவரங்கள் ஒரே சார்ட்டில் கொடுக்கப்பட்டுள்ளன.
வரைபடம் போன்ற இந்தச் சார்ட்டில் ஸ்மார்ட் போன்கள் சின்னச் சின்ன ஐகான்களாக இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு ஐகானையும் கிளிக் செய்தால் அதன் அம்சங்கள் மற்றும் விலையைப் பார்க்கலாம். போனின் நினைவுத்திறன், டிஸ்பினே துல்லியம், அளவு உள்ளிட்ட அடிப்படை அம்சங்களையும் பார்க்கலாம்.
ஒரே சார்ட்டின் மூலமே சந்தையில் உள்ள ஸ்மார்ட் போன்களின் நிலை மற்றும் நமக்கேற்றது எது என்பதை ஆராய்ந்துவிடலாம். அமெரிக்காவை மையமாகக் கொண்ட இணையதளம் என்றாலும் போன்களின் விவரங்கள் பொதுவானவை என்பதால் எல்லோருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும்.
இந்தத் தளம் ஏற்கெனவே லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்காக இதே போன்ற வழிகாட்டி வரைபடத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளது.
ஸ்மார்ட் போன் சார்ட்டை பார்க்க: >http://www.productchart.com/smartphones/