கூகுள் நிறுவனம் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் முந்திக் கொள்ளும் நிறுவனமாகத் திகழ்கிறது. தற்போது இதன் அடுத்த தயாரிப்பு ரோபோ நாய்க்குட்டி.
இந்த ரோபோ நாய்க்குட்டி கட்டளைக்கு கட்டுப்பட்டு பின் தொடர்ந்து வருகிறது. காடு, மலை, சேறு ,சகதிகளில் ஏறி இறங்குகிறது. கடின சூழலில் பணிபுரிபவர்களுக்கு மிகவும் உபயோகப்படும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திர நாய்க்குட்டியின் முதுகில் சுமைகளை ஏற்றி வைத்து கூடவே அழைத்துச் செல்லலாம். கீழே எட்டி உதைத்தாலும் விழுந்துவிடாமல் உறுதியாக நிற்கிறது. நடக்கவும், ஓடவும், பின்தொடர்ந்து வரும் வகையில் இது சென்சார் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.