தொழில்நுட்பம்

அடுத்த 10 ஆண்டுகளில் கேள்விக்குறியாகும் சாமானியர்களின் அந்தரங்கம்

ஏஎன்ஐ

அடுத்த 10 ஆண்டுகளில், அந்தரங்க (பிரைவசி) விவரங்களைக் காக்க, மிக அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்று பியூ ஆராய்ச்சி மையம் தனது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வின் முடிவில், "வரும் காலங்களில் உலகம் மிகவும் வெளிப்படையாகவும் அல்லது பகிரங்கத்தன்மையுடனும் இயங்கும். இணைய வசதி மேம்பட்டுக் கொண்டே இருக்கும் காலக்கட்டத்தில் வெளிப்படைத்தன்மை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

ஏற்கெனவே 2014-ல் பிரபலங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், விவரங்கள் போன்ற பல தரப்பட்ட அந்தரங்க விஷயங்கள் இணையத்தில் கசிந்தன.

இதன் அடிப்படையில் வரும் காலத்தில் அந்தரங்க விஷயங்களைப் பாதுகாத்துக் கொள்வது மிகவும் ஆடம்பர செலவுமிக்க காரியமாக விளங்கும் என்று பல வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நிலையில், சாமானிய மக்களின் அந்தரங்கம் கேள்விக்குறியாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆய்வு குறித்து பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டிஃபானி ஷாலின் கூறும்போது, "இந்தச் சமூகம் அந்தரங்கம் வெளிப்படைத்தன்மையுடன் பார்க்க தொடங்கும் காலக்கட்டத்தில், இதனை அடிப்படையாக கொண்டு மிகப் பெரிய அளவிலான விளைவுகள் உருவாகும். இதற்கு பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினர் பெரிய அளவில் மிக எளிமையாக பாதிக்கப்படுவார்கள்.

2025-ல் அனைத்துமே வெளிப்படைத்தன்மையுடன் காணப்படும். அப்போது மக்களுக்கு அந்தரங்கம் என்பது வெறும் பிம்பமாக மட்டுமே இருக்கும்" என்றார் அவர்.

இந்த ஆய்வு குறித்த விவரத்தை, அமெரிக்காவின் 'தி வாஷிங்டன் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT