நச்சுத் தன்மையை உறிஞ்சும் ஸ்பாஞ்சுகள் இப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. கண்ணாடியின் மூலக்கூறில் உருவாக்கப்பட்ட நானோபட் ஸ்பாஞ்சுகள் தண்ணீரை உறிஞ்சாது. ஆனால் நச்சுப் பொருள்களை உறிஞ்சிவிடும். இதனால் கடலில் பெட்ரோலிய கலப்பு உள்ளிட்ட பிரச்சினை ஏற்படும்போது இதைப் பயன்படுத்த முடியும். இது உண்மையான அளவைக் காட்டிலும் 8 மடங்கு நச்சுத் தன்மையை உறிஞ்சும். தண்ணீரில் இதை நனைத்தாலும் அதில் உள்ள நச்சுத் தன்மையை இது உறிஞ்சிவிடும்.