தொழில்நுட்பம்

பாதுகாப்பான போன்

சைபர் சிம்மன்

அனுப்பிய பிறகு தானாக மறையும் செய்திகளும், புகைப்படங்களும் ஸ்மார்ட் போன் உலகில் பிரபலமாக இருக்கின்றன. பிரைவசி கவலை மற்றும் தகவல் திருட்டு ஆபத்து அதிகரிக்கும் காலத்தில் தானாக மறையும் சேவைகளுக்கான தேவையும் அதிகரிக்கிறது. இதன் அடுத்த கட்டமாக தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் ஸ்மார்ட்டான போன் அறிமுகமாக இருக்கிறது.

இந்த போனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது விமான தயாரிப்பு சேவை நிறுவனமான போயிங் என்றும், பிரபல ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான பிளாக்பெரி இதில் உதவி வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இன்னும் சுவாரஸ்யமான தகவல் இந்த போன் ஆண்ட்ராய்டு போனாக உருவாவதுதான். அரசு அமைப்புகள் மற்றும் அரசு ஒப்பந்த நிறுவனங்களை இலக்காகக் கொண்டு இந்த போயிங் பிளாக்போன் உருவாக்கப்பட்டு வருகிறது.

அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே இந்த போன் விற்கப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன் கால்கள் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும். இந்த போன் முழுவதும் மூடப்பட்டிருக்குமாம். அனுமதி இல்லாமல் யாரேனும் போனைத் திறக்க முயன்றால் போனில் உள்ள எல்லாத் தகவல்களும் தானாக அழிந்துவிடுமாம்.

SCROLL FOR NEXT