மாணவர்களுக்கு என்று சில பிரத்யேக மொபைல் அப்ளிகேஷன்கள் உள்ளன. அவற்றில் சில:
அலார்மி (Alarmy)
மாணவர்கள் வகுப்பிலோ, வீட்டிலோ தூங்கிவிட்டால் எழுப்பி விட தோதான அப்ளிகேஷன். ஆப்பிள் ஐடியூனில் இது கிடைக்கும்.
ஸ்வோர்கிட் (Sworkit)
கட்டுகோப்பாக உடலை வைத்துக்கொள்ள, உடற்கூறுகள் பற்றி தகவலும், ரிமைன்டரும் சொல்லும் அப்ளிகேஷன்.
ஸ்டூடியஸ் (Studious)
வகுப்பு நேரங்களில் தேவையில்லாத கால்களை கட் செய்ய உதவும் அப்ளிகேஷன். இதை பயன்படுத்தி ஆசிரியர் திட்டில் இருந்து தப்பிக்கலாம்.
ரியல் கால்க் (Real Calc)
பொறியியல், கணிதம் படிக்கும் மாணவர்களுக்கான சயின்டிபிக் கால்குலட்டர் அப்ளிகேஷன் இது. மேலே உள்ள மூன்றும் கூகுள்பிளேயில் கிடைக்கும்.
ஸெல்ப் கண்ட்ரோல் (Self control)
தேர்வுக்குப் படிக்கும் நேரங்களில், சமூக வலைத்தளங்கள் மாணவர்களை திசை திருப்பும். இந்த அப்ளிகேஷன் மூலம் படிப்பு நேரத்தில் வேண்டாத தளங்களை ப்ளாக் செய்து விடலாம். இது ஓப்பன் ஸோர்ஸ் அப்ளிகேஷன். மாக் ஓஎஸ் எக்ஸில் செயல்படும்.
தொகுப்பு எம். விக்னேஷ்
மதுரை 625009