சமீபத்தில் இந்தியாவில் பயனாளிகள் எண்ணிக்கையில் வாட்ஸ் அப் செயலி 70 மில்லியன் எனும் மைல்கல்லை எட்டியது. இப்போது மொபைல் உலாவியான (பிரவுசர்) ஓபரா மினி இந்தியாவில் 50 மில்லியன் பயனாளிகள் எண்ணிக்கையை எட்டியுள்ளது. இந்த மைல்கல் தொடர்பான செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ள ஓபரா, இந்தியாவில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் செயலிகளுக்கு அடுத்த இடத்தில் தனது பிரவுசர் இருப்பதாகவும் கூறியுள்ளது. அதோடு உலக அளவில் இந்தியாவில்தான் ஓபரா மினி பயனாளிகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஓபரா பிரவுசர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் பயனாளிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டு 110 சதவீதம் அதிகரித்துள்ளது. இது மொத்தப் பயனாளிகளில் பாதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இணைய பக்கத்தை 90 சதவீதம் சுருக்கித் தருவது உட்பட பல்வேறு சிறப்பம்சங்கள் பிரவுசரில் இருப்பதாக ஓபரா தெரிவிக்கிறது. நீங்களும் வேண்டுமானால் பயன்படுத்திப் பரிசோதித்துப் பாருங்கள்!