தொழில்நுட்பம்

ஆண்ட்ராய்டு வியரில் பிளிப்கார்ட்

சைபர் சிம்மன்

ஸ்மார்ட் போன் திரைபோலவே ஸ்மார்ட் வாட்சுக்கான திரையும் முக்கியத்துவம் பெறலாம். எனவே நிறுவனங்கள் ஸ்மார்ட் வாட்சுகளுக்கான செயலிகளிலும் (ஆப்ஸ்) கவனம் செலுத்தியாக வேண்டும். இதை பிளிப்கார்ட் உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது. அதன் அடையாளம்தான், ஆண்ட்ராய்டு வியருக்கான பிளிப்கார்ட்டின் செயலி.

இந்தியாவின் முன்னணி மின்வணிகத்தளமான பிளிப்கார்ட், ஆண்ட்ராய்ட் வியர் ஸ்டோருக்கான முதல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோட்டோ 360 போன்ற பிளிப்கார்ட்டில் விற்பனையாகும் ஸ்மார்ட் வாட்சுகளில் இந்தச் செயலி முன்கூட்டியே இடம்பெற்றிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஷ் லிஸ்ட் மற்றும் நோட்டிபிகேஷன் ஆகிய வசதிகள் இந்தச் செயலியில் உண்டு. எதிர்காலத்தில் ஸ்மார்ட் போன் செயலியில் உள்ள எல்லா வசதிகளும் இதிலும் இடம்பெறலாம். ஸ்மார்ட் வாட்ச் வைத்திருப்பவர்கள், ஆண்ட்ராய்டு சாதனத்தில் பிளிப்கார்ட் செயலியை அப்டேட் செய்தால் போதுமானது.

ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் வாட்சின் அறிமுகத்திற்கு இன்னமும் காத்திருக்க வேண்டும். அடுத்த ஆண்டு தொடக்கம் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக 2015 வசந்தத்தில்தான் ஆப்பிள் வாட்ச் சந்தைக்கு வரலாம் எனச் சொல்லப்படுகிறது.

SCROLL FOR NEXT