ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ட்ஸ் படுக்கையையும் விட்டுவைக்க வில்லை. பாட் ஸ்மார்ட் பெட் ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் வேலை என்னவென்றால், நம் உடல் வெப்ப நிலைக்கு ஏற்ப, நாம் தூங்குவதற்கான வெப்பநிலையை உருவாக்கித் தரும். பொழுது விடிய ஆரம்பிக்கும் சமயத்தில் அதற்கேற்ப வெப்பநிலை மாறி நம்மை எழுப்பி விடும். இரண்டு பேர் உறங்கும்போது அவரவருக்குத் தேவையான வெப்ப நிலையை தனித்தனியே உருவாக்கித் தரும் நுண்திறன் மிக்க படுக்கை இது.