தொழில்நுட்பம்

மூன்றாவது கண்

செய்திப்பிரிவு

மூன்றாம் கண் என்று சொல்லும் அளவிற்கு சிசிடிவி கேமராவின் பயன்பாடு தற்போது மிகவும் அதிகரித்து விட்டது. வீட்டு வளாகங்களில் சிசிடிவி பொருத்தலாம். ஆனால் வீட்டுக்கு உள்ளே? பதில் சொல்கிறது ’நெட்கியர் அர்லோ க்யூ’. பார்ப்பதற்கு மேஜை கடிகாரம் போல் இருக்கும் இந்தக் கேமராவை தேவையான இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.

மற்ற கேமராக்களைப் போல் இல்லாமல் நமக்கு எந்தந்த நேரங்களில் தேவையோ அப்போது மட்டும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எப்போது வீடியா பதிவு செய்ய வேண்டும் என்பதை நாம் உள்ளீடு செய்து விட்டால் போதும் அந்த நேரங்களில் மட்டும் இந்த கேமரா தானாகவே ஆக்டிவேட் ஆகி காட்சிகளை பதிவு செய்யத் தொடங்கிவிடும்.

SCROLL FOR NEXT