தொழில்நுட்பம்

பொருள் புதுசு: 360 டிகிரியில் வேக்வம் க்ளீனர்

செய்திப்பிரிவு

வீடு, அலுவலகம் என அனைத்து இடங்களிலும் தற்போது வேக்வம் க்ளீனர் இடம்பெற்றுவிட்டது. வேக்வம் க்ளீனரை முன்பு நாம்தான் இயக்க வேண்டியதாக இருந்தது. அதன் பிறகு தானியங்கி வேக்வம் கிளீனர் அறிமுகம் ஆனது.  இதுவும் போதாது, இதற்கு மேல் எதாவது கண்டுபிடித்து ஆகவே வேண்டும் என்ற வெறியில் தற்போது புதிய வேக்வம் க்ளீனர் ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது.

‘டைசன் 360’ டிகிரி என்ற இந்த வேக்வம் க்ளீனருக்கு 360 டிகிரியிலும் கண்கள். நேர்கோட்டில் மட்டுமல்லாமல், 360 டிகிரி அளவிலும் வட்டம் முக்கோணம் சதுரம் என்று எல்லா வழிகளிலும் சுழன்று சுழன்று சுத்தம் செய்யும். ஆடிண்டே பாடமாட்டார் என்பது போல் படிகளில் மட்டும் ஏறமாட்டார்.

SCROLL FOR NEXT