நல்ல புத்தகத்தைப் படித்தால் மட்டும் போதுமா என்ன? அது பற்றி சக வாசகர்களுடன் விவாதித்தால்தான் வாசிப்பு அனுபவம் இன்னும் விசாலமாகும். ஸ்மார்ட் போன் யுகத்தில் இத்தகைய பகிர்தலுக்கு உதவும் வகையில் புக்டிரைப்ஸ் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
ஐபோனுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலியில், புத்தகப் புழுக்கள் தாங்கள் படித்த, ரசித்த புத்தகம் தொடர்பான குழுவை உருவாக்கிக்கொண்டு அது பற்றி விவாதிக்கலாம். இந்தக் குழுவில் சேருமாறு நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கலாம். நமக்குப் பிடித்த புத்தகம் தொடர்பான குழுவில் சேர்ந்து கருத்துத் தெரிவிக்கலாம்.
நாம் விவாதிக்க விரும்பும் புத்தகங்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு கருத்துச் சொல்ல அழைக்கலாம். ஒவ்வொரு புத்தகத்தின் பின்னும் ஒரு குழு இருக்கிறது என்பதைச் சாத்தியமாக்க விரும்புகிறது இந்தச் செயலி.
மேலும் விவரங்களுக்கு: http://booktribes.us/