தொழில்நுட்பம்

பொருள் பொதுசு: மடக்கும் வீடு

செய்திப்பிரிவு

டென் ஃபோல்டு இன்ஜினீயரிங் என்கிற நிறுவனம் மடக்கும் வீடுகளுக்கான வடிவமைப்பை வெளியிட்டுள்ளது. கண்டெய்னர் வடிவில் எந்த இடத்துக்கும் எடுத்துச் செல்லலாம். வீட்டு உள் அறைகளை மாற்றியமைக்கவும் முடியும்.

3டி டயர்

3djpg100 

மிச்சிலின் டயர் நிறுவனம் 3டி டயர்களை தயாரிக்கும் ஆராய்ச்சியில் உள்ளது. மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைக் கொண்டு இதைத் தயாரிக்க உள்ளது.பட்டனை தட்டினால் டயர் தயார்.

மறுசுழற்சி கார்

காருக்கான கட்டுமானத்தை பீட்ருட் மற்றும் ஒரு வகை விதைகளைக் கொண்டு நெதர்லாந்து பல்கலைக் கழகத்தை சேர்ந்த மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். உலோக பயன்பாடு குறைவு என்பதால் சுற்றுச் சூழலுக்கும் உகந்தது.

ரோபோ தொட்டில்

robojpg100 

குழந்தையின் தட்டிலை ஆட்டவும் ரோபோ பயன்பாடு வந்துவிட்டது. ஸ்நூ என்கிற இந்த தொட்டிலை ஸ்மார்ட்போன் மூலம் இயக்கலாம். இந்த தொட்டிலில் உள்ள துணியில் குழந்தையை சுற்றினால் தாயிடம் கிடைக்கும் அணைப்பு போலவே குழந்தைக்குக் கிடைக்கும். குழந்தை அழுதால் தானாகவே இந்த தொட்டில் ஆடி குழந்தையை உறங்க வைக்கும். டாக்டர் ஹார்வே கார்ப் என்பவருடன் இணைந்து மாசெசூசெட்ஸ் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஸ்மார்ட்போன் மூலம் இயக்கப்படும் இந்த தொட்டிலின் விலை 1,160 டாலர்.

மரபணு மாற்ற கொசு

kosujpg100 

கொசுக்களின் மரபணுவை மாற்றுவதன் மூலம் மனிதனை கடிக்காமல் செய்ய முடியும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கொசுக்களால் பரவும் நோய்கள் மூலம் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 4 லட்சம் பேர் இறக்கின்றனர். கொசுக்களை அழிக்க முடியாது என்றாலும் மரபணுவை மாற்றுவதன் மூலம் மனிதனை காக்க முடியும் என்பதால் இந்த ஆராய்ச்சியில் இறங்கியுள்ளர். இதற்காக அமெரிக்க பாதுகாப்புத் துறை 100 கோடி டாலர் நிதி ஒதுக்கியுள்ளது. பூச்சியியல் ஆய்வாளர்களாக ஆன்ட்ரே நூஸ், டேனிஸ் மாத்யூ ஆகியோர் இதில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT