பெரிய பெரிய ஸ்மார்ட்போன்கள் வந்துகொண்டிருக்கும் நேரத்தில் நானோபோனை அறிமுகப்படுத்தியுள்ளது எலாரி நிறுவனம். மிகச் சிறிய அளவிலான இந்தப் போனில் 32 எம்பி நினைவக திறன், புளுடூத் வசதி போன்றவை உள்ளன. இந்த போனின் விலை ரூ.3,999.
4ஜி கேமரா
4ஜி முறையில் இயங்கக்கூடிய வகையில் இந்த கேமரா உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் உங்களுடைய வாகனம் எங்குள்ளது என்பதை உள்ளிட்ட விஷயங்களை நமக்கு தெரிவிக்கிறது. மொத்தம் ஏழு வகையான் லென்சுகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
ஸ்மார்ட் கருவி
நமது வீடுகளில் ஏசி பயன்படுத்துவதால் ஏசி கட்டணம் அதிகமாகும் என்பது பலருக்கும் வருத்தமாக இருக்கும். இந்தக் குறையை போக்குவதற்கு புதிய கருவியை கண்டறிந்துள்ளனர். மிஸ்ட்பாக்ஸ் என்ற இந்தக் கருவி ஏசி மூலம் அதிகமாகும் உங்களது மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதம் குறைக்கும். இந்தக் கருவியை உங்களது ஏசியோடு பொருத்திக் கொள்ள வேண்டும். இந்தக் கருவியை அப்ளிகேஷன் மூலமாக ஸ்மார்போனோடு இணைத்துக் கொள்ளமுடியும். இந்தக் கருவி விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
ஆளில்லா வேன்
தற்போது அனைவருமே ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்க பழகிவிட்டோம். ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதில் உள்ள ஒரே கஷ்டம் பொருட்களை விநியோகம் செல்வதற்கு அதிக நேரமாகும் என்பதுதான். ஆனால் லண்டனில் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு புதிய டிரைவர் இல்லா வேனை அறிமுகப்படுத்தியுள்ளனர். வேனில் உள்ள கண்டயினரில் உள்ள பொத்தானை அழுத்தி பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். 128 கிலோ கொண்ட பொருட்களை டெலிவரி செய்யும் அளவுக்கு திறன் கொண்ட வகையில் இந்த வேன் உருவாக்கப்பட்டுள்ளது.
இயர்பட்ஸ் ஸ்பீக்கர்
இயர்பட்ஸ் வடிவத்தில் புதிய வகை ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். ஐபி54 தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. இந்த ஹெட்போன்களின் விலை ரூ.6,650. தற்போது இங்கிலாந்தில் மட்டும் விற்பதற்கு மோட்டோரோலா திட்டமிட்டுள்ளது.