பழைய நினைவுகளைத் தூண்டும் பொருட்கள் மீது நமக்கு ஈர்ப்பு அதிகமாகவே இருக்கும். அதற்காகவே நவீன தொழில்நுட்பத்தில் பழைய மாடல் போல வயர்லெஸ் ஸ்பீக்கரை லோப்ரி நிறுவனம் உருவாக்கியுள்ளது.
ரோல்பி
கையடக்கமான அளவிடும் கருவி. ரோல்பி என்று பெயர். 4 அங்குலம் 8 அங்குல அளவுகளில் கிடைக்கும். கையில் பிடித்துக் கொண்டு சுழற்ற வேண்டும். எல்லா வித அளவீட்டுக்கு பயன்படுத்தலாம்.
சூடேற்றும் ஆடை
அதிக குளிர் நிலவும்போது உடல் வெப்ப நிலையை சமநிலைப்படுத்த உதவும் ஆடை. வெப்பத்தை உருவாக்க இதற்குள் பிரத்யேக இழைகள் உள்ளன. கை பகுதியில் உள்ள பொத்தனை அழுத்துவதன் மூலம் செயல்படும்.
மிதக்கும் மின் உற்பத்தி
சீனாவின் ஹூனைன் பகுதியில் நிலக்கரி சுரங்கமும் அதிலிருந்து மின் உற்பத்தியும் நடந்து வந்தது. அதனால் உருவான சுற்றுச் சூழல் பாதிப்பால் சுரங்கத்தை நீர் தேக்கமாக மாற்றியதுடன், அதன் மேல் சோலார் பேனல்களை அமைத்து 40 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய தொடங்கிவிட்டனர்.
மிதவைகளில் சோலார் பேனல்கள் அமைத்துள்ளதுடன் அதனை நேரத்திற்கு ஏற்ப மாற்றும் வசதிகளையும் உருவாக்கியுள்ளனர். உலக அளவில் மிகப் பெரிய மிதக்கும் சோலார் திட்டமாக உள்ளது.
தடுமாற்றத்தை தடுக்கும் காலணி
வயதானவர்கள் நடக்கும்போது கீழே விழுந்துவிடாமல் இருக்க கை தடிகளை பயன்படுத்துவார்கள். அதற்கு பதிலான அணிந்திருக்கும் காலணியே சமநிலையை ஏற்படுத்திக் கொள்ளும் விதமான காலணியை உருவாக்கியுள்ளனர்.
இந்த காலணியின் அடிப்பகுதியில் பற்சக்கரங்கள் போன்ற அமைப்பு உள்ளது. தடுமாறும் நேரத்தில் தானாகவே உடல் சமநிலையை இந்த காலணி ஏற்படுத்தி தரும்.