தொழில்நுட்பம்

இந்தியாவில் மோட்டோ ஜி5எஸ், ஜி5எஸ் ப்ளஸ் அறிமுகம்: என்னென்ன சிறப்பம்சங்கள்?

செய்திப்பிரிவு

இந்தியாவில் மோட்டோரோலா சார்பில் செவ்வாய்க்கிழமை அன்று மோட்டோ ஜி5எஸ் மற்றும் ஜி5எஸ் ப்ளஸ் ஆகிய மொபைல் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அமேசானில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11.59 மணியில் இருந்து போன் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி5எஸ் அம்சங்கள்

விலை - ரூ.13,999

இயங்குதளம் - ஆன்டிராய்ட் 7.1.1

ஸ்க்ரீன் அளவு- 5.2’’

கேமரா- 16 மெகா பிக்சல்

முன்பக்க கேமரா- 5 மெகா பிக்சல்

செல்ஃபியில் ஃப்ளாஷ் வசதி

மெமரி- 4 ஜிபி ரேம், 32 ஜிபி சேமிப்பு வசதி

மோட்டோ ஜி5எஸ் ப்ளஸ் அம்சங்கள்

விலை - ரூ.15,999

மெமரி- 4 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு வசதி (128 ஜிபி வரை)

வண்ணம் - சாம்பல் மற்றும் தங்க நிறங்கள்

ஸ்க்ரீன் அளவு- 5.5’’

கேமரா- பின்புறத்தில் இரண்டு 13 மெகா பிக்சல் கேமராக்கள்

சிறப்பம்சம்

மோட்டோ ஜி5எஸ் ப்ளஸ் போனின் சிறப்பம்சமே கேமராதான். இதன் மூலம் சுற்றுப்புறத்தை மங்கலாக்கி, பொருளை மட்டும் ஃபோகஸ் செய்து போர்ட்ரெய்ட் புகைப்படங்களை எடுக்கமுடியும். புகைப்படங்களில் அதிக ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்த போன் பயனுள்ளதாக இருக்கும் என்று மோட்டோரோலா மொபைல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT