தொழில்நுட்பம்

மைக்ரோசாப்ட் லூமியா முதல் பார்வை

சைபர் சிம்மன்

லூமியா போன்களில் நோக்கியா பெயருக்குப் பதிலாக மைக்ரோசாப்ட் பெயரே முன்னிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. சரி, மைக்ரோசாப்ட் பெயரில் வெளியாகும் லூமியா போன் எப்படி இருக்கும் என அறிவதில் ஆர்வம் இருக்கிறதா? சீனாவின் வெய்போ இணையதளம் இதற்கான பதிலை அளித்துள்ளது. இந்தத் தளத்தில் மைக்ரோசாப்ட் லூமியாவின் போன் எனும் தகவலுடன் புதிய போனின் புகைப்படம் கசிந்துள்ளது. சீன அரசிடம் சான்றிதழ் பெற்ற RM-1090 போன்களில் இவை இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லூமியா 530 போலவே காட்சி அளிக்கும் இந்த போனின் மேல்பகுதியில் நோக்கியா லோலோவுக்குப் பதில் மைக்ரோசாப்ட் பெயர் இடம்பெற்றுள்ளது. பின் பக்கத்திலும் மைக்ரோசாப்டின் பெயர்தான் உள்ளது. 9.32 மீமீ அகலம் , இரட்டை சிம் வசதி,1,905mAh பேட்டரி, 3ஜி வசதி ஆகியவை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வரட்டும் பார்க்கலாம்.

SCROLL FOR NEXT