தொழில்நுட்பம்

தளம் புதிது: கண்டுபிடிப்பாளர்களின் பாதையில்...

சைபர் சிம்மன்

பயண ஏற்பாட்டு இணையதளமான டிராவல்பேக், ‘கண்டுபிடிப்பின் பாதையில்’ எனும் சுவாரஸ்யமான இணைய பக்கத்தை உருவாக்கி வரலாற்றில் பின்னோக்கி பயணிக்க வைத்துள்ளது.

எளிமையாக வடிவமைக்கப்பட்ட இந்தப் பக்கத்தில் வரலாற்றின் ஆகச் சிறந்த கண்டிபிடிப்பாளராக கருதப்படும் கொலம்பசில் தொடங்கி வரலாற்று பயணியான மார்கோ போலோ வரை 13 முக்கிய கண்டுபிடிப்பாளர்கள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கண்டுபிடிப்பாளர்கள் பயணத்தை மேற்கொண்டபோது அதற்கு தேவைப்பட்ட காலமும் தற்போது நவீன போக்குவரத்து வசதிகள் உள்ள சூழலில் அந்த பயணத்தை நிறைவேற்றக்கூடிய கால அவகாசமும் ஒப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பீட்டை கூகுள் வரைபடம் மூலமும் செய்து பார்க்கலாம். கண்டுபிடிப்பாளர்கள் மேற்கொண்ட சாகசப்பயணத்தின் வழித்தடத்தை கூகுள் வரைபடம் மீது பார்க்கலாம்.

அட்லாண்டிக் பெருங்கடலை விமானம் மூலம் கடந்த வீராங்கனை அமிலி எர்ஹார்ட், கேப்டன் குக் உள்ளிட்டோரது சாகப்பயணங்களையும் இப்படி வரைபடத்தில் ஒப்பிட்டு பார்க்கலாம்.

SCROLL FOR NEXT