கடந்த வாரம் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்போனை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. புளுடூத், ரிமோட் மூலம் இயக்குவது என பல புதிய தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ.6,499
ரே பேபி
குழந்தைகளை கண்காணிப்பதற்காக புதிய வகை மானிட்டரை ஜான்சன் அண்ட் ஜான்சன் உதவியுடன் உருவாக்கியுள்ளனர். குழந்தையின் இதயத்துடிப்பு, தூங்கும் நேரம் என அனைத்தையும் இந்த மானிட்டர் கண்காணிக்கிறது.
கார்கோ பைக்
சரக்குகள் அல்லது மற்ற லக்கேஜ்களை அதிகம் எடுத்துச் செல்லும் வகையில் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. முழுவதும் பேட்டரி மின்சாரத்தில் இயங்கக்கூடியது. மணிக்கு 28 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
ஸ்டார் வார்ஸ் கார்
ஸ்டார் வார்ஸ் ஹாலிவுட் திரைப்படத்தில் வரும் காரை போன்று குழந்தைகளுக்கு ஒரு புதிய காரை உருவாக்கியுள்ளனர். விமானம் போன்று இந்த கார் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை 499 டாலர். இதன் மொத்த எடை 59 கிலோ. எடை குறைவாக உள்ளதால் எங்கும் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லமுடியும். 3 கியர்கள் உள்ளன. பேட்டரி மூலம் இயங்ககூடிய வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.
ரைடர் ஹேக்கிங்
குறைந்த தொலைவுள்ள இடங்களுக்குச் செல்ல நாம் ரைடரை பயன்படுத்தி வருகிறோம். இந்தியாவிலும் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ரைடரை ஸ்மார்ட்போன் மூலமாக கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர். அதாவது இதன் மூலம் எந்த ரைடர் வாகனத்தையும் ஸ்மார்ட்போன் மூலம் 5 நொடிகளில் ஹேக் செய்யமுடியும். இது ஒரு பக்கம் எதிர்மறையாக இருந்தாலும் ரைடரை ஸ்மார்ட்போன் மூலமாக இயக்கமுடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.