தொழில்நுட்பம்

உலகம் முழுக்க தினந்தோறும் 100 கோடி பேர் பயன்படுத்தும் வாட்ஸ் அப்

ஐஏஎன்எஸ்

வாட்ஸ் அப் செயலியை தினந்தோறும் 100 கோடி மக்கள் (1 பில்லியன் பேர்) தீவிரமாகப் பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுக்க 100 கோடி பயனர்களைக் கொண்ட, மிகப்பெரிய குறுஞ்செய்தி நிறுவனம் வாட்ஸ் அப். இச்செயலியை தினமும் 100 கோடி மக்கள் (1 பில்லியன் பேர்) தீவிரமாகப் பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வாட்ஸ் அப்பில் தினந்தோறும் 55 பில்லியன் குறுஞ்செய்திகள் பகிரப்பட்டு வருவதாகவும், 100 கோடி வீடியோக்கள் பகிர்ந்துகொள்ளப்படுவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்பை மாதந்தோறும் 130 கோடி மக்கள் பயன்படுத்துவதாகவும், 60 மொழிகளில் வாட்ஸ் அப் இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் நாள்தோறும் 450 கோடி படங்கள் உலகம் முழுக்கப் பகிரப்படுகின்றன.

2014-ல் சுமார் 21.8 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாட்ஸ் அப்பை விலைக்கு வாங்கியது ஃபேஸ்புக். அதைத் தொடர்ந்து வாட்ஸ் அப்பில் தொடர்ந்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வீடியோ காலிங், 24 மணி நேரத்தில் மறைந்துவிடும் ஸ்டேட்டஸ் வசதி, செயலி மறு வடிவமைப்பு, பாதுகாப்பு ஆகிய வசதிகள் காரணமாக வாட்ஸ் அப்பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT