எங்கு பார்த்தாலும் செயலிகள்(ஆப்ஸ்) பற்றித்தான் பேச்சாக இருக்கிறது. செயலிகள் பயன்படுத்த சுலபமாக இருப்பது போல புதிய செயலிகளை உருவாக்குவதும் சுலபமானது தான். அட நாமும் கூட செயலி செய்து பார்க்கலாமே என்ற ஆசை இருந்தால் அதற்கான இலவச இணைய வகுப்பை ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. அந்நாட்டின் சார்லஸ் ஸ்டர்ட் பல்கலைக்கழகம் (Charles Sturt University ) இணைய வகுப்புகள், வெப்பினார் மூலம் இந்தப் பயிற்சியை வழங்க இருக்கிறது.
போன்கேப் எனும் ஓபன் சோர்ஸ் பிரேம் ஒர்க் மூலம் இந்தச் செயலிப் பயிற்சியை அளிக்கிறது. ஆண்ட்ராய்டு, ஐபோன், விண்டோஸ் என எல்லா போன்களுக்குமான செயலிகளையும் உருவாக்கலாம். நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இணைய வழிக் கல்வி செல்வாக்குப் பெற்று வரும் நிலையில் இது புதியதொரு நல்வரவு; மேலும் விவரங்களுக்கு: >http://www.itmasters.edu.au/free-short-course-cross-platform-mobile-app-development/