தொழில்நுட்பம்

பொருள் புதுசு: ரேடியோ ஸ்பீக்கர்

செய்திப்பிரிவு

பழைய மாடல் ரேடியோ வடிவில் இந்த புளுடூத் ஸ்பீக்கர் உருவாக்கப்பட்டுள்ளது. சரிகம அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஸ்பீக்கரில் 5,000 இந்தி பாடல்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. 1.5 கிலோ எடை கொண்ட இந்த ஸ்பீக்கர் பல வண்ணங்களில் கிடைக்கிறது.

இன்ஸ்டா 360 கேமரா

ஒரு வினாடிக்கு 30 பிரேம்களை படம் எடுக்கும் வசதியுடன் இந்த கேமரா உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நீங்கள் லைவ் ஸ்ட்ரீமாக வீடியோக்களை பதிவேற்ற முடியும். யுஎஸ்பி மூலமாக உங்கள் ஸ்மார்ட்போனோடு இணைத்து இயக்கமுடியும்.

சுறுசுறுப்பு நாற்காலி

சாய்ந்து உட்காரக்கூடிய நாற்காலிகளை நாம் விரும்புவோம். ஆனால் இந்த புதிய வகை நாற்காலியில் எந்த சாய்மானமும் இல்லாமல் சுறுசுறுப்பாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அளவுகளில் இந்த நாற்காலி கிடைக்கிறது.

SCROLL FOR NEXT