தொழில்நுட்பம்

ஸ்மார்ட் போன் பிரிண்டர்

சைபர் சிம்மன்

ஸ்மார்ட் போன்களின் செல்வாக்கு அதிகரித்துகொண்டே செல்லும் நிலையில் படங்களை போனில் இருந்தே அச்சிட்டுக் கொள்ளும் சேவைக்கான தேவையும் அதிகரித்திருக்கிறது. புதிதாக அறிமுகமாகிக்கொண்டிருக்கும் ஸ்மார்ட் போன் சார்ந்த பிரிண்டர் சேவைகளைப் பார்த்தால் இந்த எண்ணம்தான் ஏற்படுகிறது. இந்த வகையில் புதிய வரவு ஸ்னேப்ஜெட். ஸ்கேனர் பாதி, பிரிண்டர் மீதி என இது வர்ணிக்கப்படுகிறது. உடனடியாகப் படத்தை அச்சிடும் தொழில்நுட்பம் மற்றும் நவீன கண்ணாடி இழைத் தொழில்நுட்பம் இரண்டும் இணைந்து இந்தச் சேவையில் செயல்படுவதாக ஸ்னேப்ஜெட் தெரிவிக்கிறது.

இந்தச் சாதனம் படங்களை ஸ்கேன் லென்சுக்குப் பதிலாகக் கண்ணாடி இழைகளைப் பயன்படுத்துகிறதாம். எனவே இந்தச் சாதனம் மீது ஸ்மார்ட்போனை வைத்தால் போதும். அது படத்தை அச்சிட்டுக் கொடுத்துவிடும். ஜப்பானிய விலை 129 டாலர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் ஷிப்பிங் உண்டு. ஆனால் அடுத்த ஆண்டு இறுதியில் தான் கையில் கிடைக்கத் தொடங்குமாம்.இதுவும் கிக்ஸ்டார்ட்டர் திட்டம் தான். மேலும் விவரங்களுக்கு: >http://snapjet.com/

SCROLL FOR NEXT