தொழில்நுட்பம்

காந்த லேஸ்

செய்திப்பிரிவு

காந்த லேஸ்

காலணிகளை லேஸ் கொண்டு முடிச்சிடுவது பலருக்கும் சங்கடமாகத்தான் இருக்கும். அந்த சங்கடத்தை போக்கும் விதமாக வந்துள்ளது இந்த காந்த கருவி. லேஸின் முடிச்சிடவேண்டிய முனை பகுதிகளை இதில் கோர்த்துக் இந்த காந்த கருவியை ஒன்றுடன் ஒன்று இணைத்துக் கொள்ள வேண்டும். கழற்றுவதும், திரும்ப பொருத்துவதும் இலகுவாக இருக்கும்.

பாட்டில் ஓப்பனர்

பாட்டில் மூடிகள் சில நேரங்களில் திறப்பதற்கு சிரமமான ஒன்றாக மாறிவிடும். அதிலும் எண்ணெய் பிசுக்கு உள்ள ஜாடிகள், ஊறுகாய் பாட்டில்களை திறப்பது சவாலானதுதான். அப்படியான மூடிகளை எளிதாக திறக்கிறது இந்த பட்டை. நான் டாக்ஸிக் மூலப்பொருளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பட்டையை சாதாரணமாக மேசை விரிப்பாகவும் பயன்படுத்தலாம்.

காயின் ஹோல்டர்

சில்லரைக் காசுகள் சேர்ந்துவிட்டால் பர்ஸில் வைப்பதற்கு பெரும்பாடாகிவிடும். நான்கைந்து ரூபாய் சில்லரை காசுகளுக்கே பர்ஸ் புடைப்பாகிவிடும். இந்த கவலையைப் போக்குகிறது இந்த காயின் ஹோல்டர். காசுகளின் அளவுக்கு ஏற்ப உள்ள இந்த ஹோல்டரில் காசுகளை வைத்தால் பர்ஸ் புடைப்பாகத் தெரியாது. விசிட்டிங் கார்டுபோல இதையும் பர்ஸுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

SCROLL FOR NEXT