செல்போன் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் கார்பன் நிறுவனம் நான்கு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 2ஜி மற்றும் 3 ஜி-யில் செயல்படும் வகையிலான இந்த செல்போன்களின் விலை ரூ. 5,500 முதல் ரூ. 7,500 வரையாகும். பணத்தை சிக்கனமாக செலவழிக்க வேண்டும் என்று உலகளவில் பெருகிவரும் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த செல்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகத் தெளிவான ஸ்கிரீன், நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி சக்தி, நினைவகத்தை நீட்டிக்கச் செய்யும் வசதி உள்ளிட்டவை இவற்றின் சிறப்பம்சங்களாகும்.