பாரம்பரிய மாடலில் நவீன வசதிகளுடன் கை கடிகாரத்தை உருவாக்கியுள்ளது மை குரோன்ஸ் என்கிற நிறுவனம். தொடுதிரை வசதி கொண்டது. ஸ்மார்ட்போனிலும் இணைத்துக் கொள்ளலாம்.
கையடக்க கூடாரம்
எங்கும் எடுத்துச் செல்லும் வகையிலான கையடக்க கூடாரம். டேப்லெட் வைக்கும் வசதி, சிறு எல்இடி, கால் நீட்டும் வசதியும் கொண்டது. செயலி மூலம் இயங்கும் ஏர்போன் வசதியும் இதனுடன் கிடைக்கும்.
ஹேர் கேட்சர்
குளியலறையில் உதிரும் தலைமுடிகள் அடைத்துக்கொண்டால் அதை சுத்தம் செய்வது சிரமமானது. ஆனால் இந்த ஹேர் கேட்சர் அதற்கு தீர்வாக உள்ளது. சுத்தம் செய்வது எளிதாக இருக்கும்.
பனாமா பேப்பர் ஜெயில்
வரி ஏய்ப்பு செய்துள்ளவர்கள் குறித்த ஆவணங்கள் என 1 கோடிக்கும் மேற்பட்ட ஆவணங்கள் கடந்த அண்டில் பனாமா பேப்பர்ஸ் என்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை அளித்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையில் ஒரு கப்பலை வடிவமைத்துள்ளனர். கப்பலின் மேற்பரப்பில் 3,300 நபர்களுக்கு என்று பேப்பரிலேயே அறைகளை உருவாக்கியுள்ளனர். ‘ஒருவாரம் ஒரு புராஜெக்ட்’ என்கிற இணையதள போட்டிக்காக இதை வடிவமைத்துள்ளனர்.
பிளாஸ்டிக் சக்கரம்
பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் சக்கரத்தை உருவாக்கும் ஆராய்ச்சிகளில் உள்ளது ஜப்பானின் பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனம். தற்போது சைக்கிள் ஸ்போக்ஸ்களுக்கு மாற்றாக தெர்மோ-பிளாஸ்டிக் ஸ்போக்ஸ்களை உருவாக்கியுள்ளது. இது இரும்பு போக்ஸைவிட இலகுவாக இருப்பதுடன், பஞ்சரும் ஆகாது. வேகமாக செல்கையில் அதிர்வுகளையும் குறைக்கும். இந்த சைக்கிள் சக்கரம் 2019-ம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.