ஸ்மார்ட் போன் சந்தையில் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் அவை புதிய அறிமுகங்கள் மூலம் மேலும் போட்டியைத் தீவிரமாக்கியுள்ளன. சீனத்து வரவான ஜியோமியின் எம்.ஐ3 மற்றும் ரெட்மி 1S ஆகியவற்றின் வரவேற்பைத் தொடர்ந்து இந்நிறுவனம் புதிய ஸ்மார்ட் போனை (எம்.ஐ 4) இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இதைத் தவிர வேறு ஒரு ஸ்மார்ட் போனும் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. இந்தப் புதிய போன் 5,000 ரூபாய் அளவிலான பட்ஜெட் போனாக இருக்கலாம் என்றும் சீனச் செய்தித் தளங்கள் தெரிவிக்கின்றன.
720p டிஸ்பிளே மற்றும் 1 ஜிபி ராம் ஆகிய அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகலாம் என்றும் தெரிகிறது. பட்ஜெட் போன் மட்டுமல்ல, கோ புரோ கேமரா போன்றவற்றையும் குறைந்த விலையில் அறிமுகம் செய்யும் திட்டம் இந்நிறுவனத்திற்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.