தொழில்நுட்பம்

செயலி புதிது: கேரளா அழைக்கிறது

சைபர் சிம்மன்

சுற்றுலா தொடர்பான தகவல்களை எளிதாக செயலி மூலம் பெறுவதைத் தான் ஸ்மார்ட்போன் பிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள். இவர்களுக்கு உதவும் வகையில் கேரள மாநிலச் சுற்றுலாத்துறை, மாநிலச் சுற்றுலா தொடர்பான தகவல்களை உள்ளங்கையில் கொண்டுவரும் வகையில் விசிட் கேரளா அட்வெஞ்சர் எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இந்தச் செயலி மூலம் கேரளாவில் உள்ள சுற்றுலா மையங்கள் தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொண்டு பயணங்களைத் திட்டமிடலாம். ஒவ்வொரு இடம் தொடர்பான தகவல்களோடு ஒளிப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் காணலாம். மேலும் தகவல்கள் விளையாட்டுப் பாணியில் சுவாரசியமாக அளிக்கப் பட்டுள்ளன. சலுகை கூப்பன்களைப் பெறும் வாய்ப்பும் உள்ளது. சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், ஓட்டல்கள் அளிக்கும் சலுகைகளைப் பெறும் வாய்ப்பும் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு: >https://www.keralatourism.org/

SCROLL FOR NEXT