தொழில்நுட்பம்

பொருள் புதுசு: பஸ் பைக்

செய்திப்பிரிவு

12 பேர் பயணிக்கக்கூடிய சிரோகோ என்கிற பஸ் பைக்கை கனடாவில் வடிவமைத்துள்ளனர். முழுவதும் மூடிய வகையில் ஏசி வசதி கொண்டது. ஒரே வரிசையில் ஆறு சக்கரங்களைக் கொண்டுள்ளது.

வைவ்வி காலணி

வைவ்வி காலணி நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் காலணியை வெளியிட்டுள்ளது. பயோமெட்ரிக் முறையில் கால்களை அளவெடுத்து அதற்கேற்ப காலணி அளவை மாற்றிக் கொள்ளலாம்.

நானோ பிளேடு

அவசர தேவைகளுக்கான சிறிய பிளேடு. தீ மூட்டவும், கத்தரிக்கவும் பயன்படுத்தலாம். 440சி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. பம்பர் அண்ட் கம்பெனி வெளியிட்டுள்ளது.

ரோபோ விவசாயம்

ஜப்பானில் உள்ள டாரோ டகாகி என்கிற கார்ப்பரேட் விவசாய உற்பத்தியாளர் புதிய வகையிலான 9 காரட் ரகங்களை கண்டுபிடித்துள்ளார். முழுவதும் ரோபோ முறையிலான விவசாயத்தில் ஈடுபட்டு வரும் இவர், எதிர்காலத்தில் ‘காரட் கிங்’ என்று பெயரெடுக்கவும் வாய்ப்புள்ளது என்று குறிப்பிடுகின்றனர். இதற்காக கன்சாய் அறிவியல் நகரத்தில் உற்பத்தி ஆலையை நிறுவ உள்ளார். இவரது உற்பத்தி முழுவதும் ரோபோ கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இதன் மூலம் பணியாளர்களுக்கான செலவு 50 சதவீதம் குறைந்துள்ளதாம்.

எலெக்ட்ரிக் விமானம்

உலகின் முதல் எலெக்ட்ரிக் பேட்டரி விமானத்தை சீமென்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதற்காக 50 கிலோ எலெக்ட்ரிக் மோட்டாரை பயன்படுத்தியுள்ளது. இந்த பேட்டரி விமானம் மணிக்கு 340 கிலோமீட்டர் வேகத்தில் பறந்துள்ளது. பேட்டரி மூலம் அதிக வேகத்தில் செல்ல முடியும் என்கிற வரலாற்றையும் சீமென்ஸ் உருவாக்கியுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் 100 பயணிகளை ஏற்றிக் கொண்டு 1,000 கிலோ மீட்டர் பயணிக்கும் வகையில் எலெக்ட்ரிக் விமானத்தை உருவாக்கும் வேலைகளில் சீமென்ஸ் உள்ளது.

SCROLL FOR NEXT