தொழில்நுட்பம்

செயலி புதிது: புதுமையான உரையாடலுக்கு உதவும் செயலி

சைபர் சிம்மன்

மெசேஜிங் பரப்பில் புதிய செயலியாக எக்சேட்லி.மி செயலி அறிமுகம் ஆகியுள்ளது. ஐபோன்களுக்காக அறிமுகம் ஆகியுள்ள இந்தச் செயலி புதுமையான முறையில் மற்றவர்களுடன் தொடர்புகொள்வதைச் சாத்தியமாக்குவதாகத் தெரிவிக்கிறது.

மேசேஜிங் செயலிகள் பொதுவாக ஏற்கெனவே அறிந்த நபர்களுடன் தொடர்புகொள்ள உதவுகின்றன. இந்தச் செயலி மாறுபட்ட வகையில், ஒத்த கருத்துள்ளவர்களை அறிந்து தொடர்புகொள்ள வழிசெய்வதாகத் தெரிவிக்கிறது.

இந்தச் செயலியில் ஒளிப்படத்தைப் பதிவேற்றிவிட்டு, பயனாளிகள் தங்களைப் பற்றித் தெரிவித்து அதனடிப்படையில் தங்களைப் போலவே உள்ளவர்களைத் தேடலாம். பின்னர் அவர்களுடன் தொடர்புகொண்டு உரையாடலில் ஈடுபடலாம்.

மெசேஜிங் பரப்பில் ஏற்கெனவே அதிகச் செயலிகள் இருக்கும் நிலையில், இந்தப் புதுமையான செயலியால் எந்த அளவு வரவேற்பைப் பெற முடியும் எனப் பார்க்கலாம்.

மேலும் தகவல்களுக்கு: >http://exactly.me/

SCROLL FOR NEXT