சாதாரணமான சைக்கிளை நாம் ஓட்டும் போது நமக்கு முதுகுவலி ஏற்படுவதுண்டு. அதை போக்கும் வகையில் இந்த சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. சாய்ந்தபடியே இதில் அமர்ந்து, ஒருவர் மட்டும் செல்லும் வகையில் இந்த சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது.
ரோபோ கேமராமேன்
கேமராமேனாக செயல்படும் புதிய ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நமது ஸ்மார்ட்போனை பொருத்திவிட்டால் அதுவாகவே மிக அழகான புகைப்படங்களை எடுக்கிறது. ஃபோகஸ் செய்வது, ஜூம் செய்வது என அனைத்து செயல்களையும் ரோபோவே செய்வது ஆச்சரியம்.
மோதிர அலாரம்
நாம் அணியக்கூடிய மோதிரத்தையே அலாரமாக பயன்படுத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு மிக அழகாகவும் அதேபோல் சிறிய மோதிரமாகவும் உள்ளது. இதனை ஸ்மார்ட்போனுடன் இணைத்து அலாரம் வைத்துக் கொள்ள முடியும்.
புளுடூத் ஜீன்ஸ்
பாரீஸில் நடந்த ஆடை கண்காட்சியில் புளுடூத் ஜூன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்புற பாக்கெட்டில் புளுடூத் கருவி பொறுத்தப்பட்டிருக்கிறது. இந்த புளுடூத் கருவியுடன் சென்சார் இணைக்கப்பட்டுள்ளது. மொபைலுடன் இதை இணைத்துக் கொள்வதன் மூலம் நாம் செல்ல வேண்டிய திசைகளை அதிர்வுகள் மூலம் சென்சார்கள் உணர்த்துகின்றன. மேலும் நமது உடலின் வெப்பநிலை எவ்வளவு, குறுஞ்செய்தியை உணர்த்துவது போன்ற தகவல்களை இந்த கருவி நமக்கு தெரிவிக்கிறது. இந்த ஜீன்ஸின் விலை 164 டாலர்.
சாலையை ஆராயும் ரோபோ
சாலையின் உட்புறங்களில் உள்ள விரிசல்கள், பள்ளங்கள் ஆகியவற்றை ஆராய்வதற்காக, அமெரிக்காவில் உள்ள நெவெடா பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர். காணொளிகள் மூலமாக பள்ளங்களை இது படம் பிடித்து சேமித்துக் கொள்கிறது. மேலும் ரோபோவில் உள்ள ரேடார்கள் சாலையின் உட்புறங்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்கிறது. இந்த ரோபோ செய்யும் ஆய்வுகளில் 96% உண்மைத்தன்மை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.