ஏசி அறைகளின் குளிரை கட்டுப்படுத்த ஒவ்வொரு முறையும் ரிமோட்டை பயன்படுத்த வேண்டும். அதற்கு பதிலாக இந்த சிறிய கருவியை வைத்தால் தானாகவே ஏசியை கட்டுப்படுத்தும். செயலி மூலம் குரல் வழியும் கட்டுப்படுத்தலாம்.
அளவீட்டு கருவி
ஸ்டான்போர்டு மாணவர்களின் ‘ஸ்டாரிடியோ’ என்கிற நிறுவனம் கையடக்க அளவீட்டு கருவியை கண்டுபிடித்துள்ளது. பொருளின் மேற்பரப்பில் வைத்தால் அவற்றின் அடர்த்தி உள்ளிட்ட விவரங்களை செயலிக்கு அனுப்பி வைக்கிறது. நிறங்களையும் பிரித்துணர்கிறது. பேனாவைப் போல இருக்கும் இந்த கருவியை அனைத்து விதமான பரப்புகளிலும் வைத்து கையாளலாம். பேப்பர், மரம், பிளாஸ்டிக் மற்றும் அனைத்து உலோகங்களையும் அளக்கிறது. வைரத்தின் அடர்த்தியையும் அளக்கலாம் என்று குறிபிட்டுள்ளனர்.
ரிஸ்ட் பேண்ட் சார்ஜர்
ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் சார்ஜரையும் எப்போதும் வைத்துக் கொண்டே அலைய வேண்டும். அதற்கு தீர்வாக சார்ஜர் ஒயரை கையில் ரிஸ்ட் பேண்ட் போல அணிந்து செல்வதற்கு ஏற்ப வடிவமைத்துள்ளனர். எடை குறைந்த நைலான் நூலிழைகளைக் கொண்டு இந்த யுஎஸ்பி சார்ஜர் உருவாக்கப்பட்டுள்ளது. 6 அடிவரை இழுத்துக் கொள்ளவும் முடியும்.
மீன் ட்ரோன்
தண்ணீருக்கு அடியில் உள்ள காட்சிகளைப் புகைப்படமாக எடுக்க உதவும் ட்ரோன். சிறிய மீனைப் போல வடிவமைக்கப்பட்டுள்ள இது செயலி மூலம் இயங்குகிறது. மீன்கள் அதிகம் உள்ள இடத்தைக் கண்டறியவும் உதவும்.
காஸ்மோ
ஹெல்மெட்டில் ஒட்டவைத்துக் கொள்ளும் வகையிலான ஒளிரும் கருவி. செயலி மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. விபத்துகளில் சிக்கினால் உடனடியாக உறவினர்களுக்கு தகவல் அனுப்பி வைக்கும். பல ஹெல்மெட்களிலும் பயன்படுத்தலாம்.