தொழில்நுட்பம்

செம ஒல்லியான போன்!

சைபர் சிம்மன்

சீன நிறுவனங்களும் கொரிய நிறுவனங்களும் அடுத்தடுத்துப் புதிய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், காஸம் ( Kazam) நிறுவனம் டோர்னடோ 348 எனும் புதிய போனை அறிமுகம் செய்திருக்கிறது.

இதுவரை கேள்விப்படாத நிறுவனமாக இருக்கும் இது பிரிட்டனைச் சேர்ந்தது. தைவான் நிறுவனமான எச்.டி.சியின் முன்னாள் ஊழியர்கள் ஜேம்ஸ் அட்கின்ஸ் மற்றும் மைக்கேல் கூம்பஸ் இணைந்து இந்நிறுவனத்தைத் தொடங்கியிருக்கின்றனர். இதன் ஆய்வு, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி வசதி சீனாவில் இருக்கிறது.

இதன் புதிய போனில் சிறப்பு என்னவென்றால், 5.15 மி.மீ தடிமன் கொண்டதாக இருப்பதுதான். இதுதான் உலகின் ஒல்லியான ஸ்மார்ட் போன் என்கிறது காஸம்.

ஏற்கனவே சீனாவின் ஜியோனி நிறுவனம் 5.5 மி.மீ தடிமன் கொண்ட Elife போன் மூலம் இதற்கு உரிமை கொண்டாடி இருக்கிறது. ஸ்கிரீன் மாற்றல் உத்திரவாதம், விலை குறைப்பு என அதிரடி உத்திகளை இந்நிறுவனம் கையாண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. எதிர்காலத்தில், இந்திய சந்தை பக்கம் வந்தாலும் வரலாம்.

SCROLL FOR NEXT