தினம் ஒரு இலக்கு சேர்ந்த இளந்தளிர்கள் பிரதீக் மகேஷ் (12), ப்ரியால் ஜெயின்(13) இணைந்து சமூக நோக்கிலான செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். விபிளெட்ஜ் எனும் பெயரிலான அந்தச் செயலி, பயனாளிகளைச் சின்னச் சின்ன சமூக நோக்கிலான செயல்களில் ஈடுபடவைக்கிறது. பத்து மரம் நடுவது, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது போன்ற செயல்களைச் சிறிய இலக்குகளாக முன்வைக்கிறது இந்தச் செயலி.
பெங்களூருவைச் இவை ஒவ்வொன்றையும் நிறைவேற்றினால் அதற்கான பரிசுப் புள்ளிகள் அளிக்கப்படுகின்றன. ஒரு இலக்கைச் செய்து முடித்தவுடன் அதை பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நட்பு வட்டத்தில் பகிர்ந்துகொள்ளலாம். இதன் மூலம் மற்றவர்களையும் சமூக நோக்கிலான செயல்களில் ஈடுபடவைக்கலாம். இதில் இலக்குகளாக அளிக்கப்படும் செயல்களைப் பிரபலமாக்க தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும் திட்டமிட்டப்பட்டுள்ளது.
கல்வி சார்ந்த தொடக்க நிறுவனமான அகாட் கில்ட் (cadGild) வழங்கிய செயலி உருவாக்கப் பயிற்சியில் பங்கேற்றதன் மூலம் பிரதிக்கும், பிரியாவும் இந்தச் செயலியை உருவாக்கியுள்ளனர்.
ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்: >https://play.google.com/store/apps/details?id=com.acadgild.vpledge&hl=en