ஆண்ட்ராய்டிலும் சரி, ஐபோனிலும் சரி, காலையில் தூக்கத்திலிருந்து விழிக்க உதவும் செயலிகள் விதவிதமாக இருக்கின்றன. என்னதான் அலாரம் அடித்தாலும் விடாமல் தூங்கும் பழக்கம் கொண்டவர்களை விடாமல் தொல்லை செய்து அவர்கள் தூக்கத்தைக் கலைக்க வழி செய்யும் விநோதமான செயலிகளும்கூட இருக்கின்றன.
இந்த வரிசையில்தான் வருகிறது ‘ஐ கான்ட் வேக் அப்' செயலி. இதில் நேரத்தை செட் செய்ததும் மறுநாள் காலை அலாரம் அடிக்கத் தொடங்கும். அதன் பிறகு வரிசையாக ஒரு கணிதப் புதிர், நினைவு விளையாட்டு, புதிர் விளையாட்டு, வார்த்தை விளையாட்டு என எட்டு விதமானப் புதிர்களை விடுவித்தால்தான் அலாரம் நிற்கும். இதற்குள் தூக்கம் காணாமல் போயிருக்கும் என்பதால் சுறுசுறுப்பாக வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடலாம்.
மேலும் விவரங்களுக்கு:>https://play.google.com/store/apps/details?id=com.kog.alarmclock