தொழில்நுட்பம்

தளம் புதிது: இசை கேட்க...

சைபர் சிம்மன்

இணையத்தில் உலாவும்போதும் சரி, கம்ப்யூட்டரில் பணியில் ஆழ்ந்திருக்கும்போதும் சரி, பின்னணியில் மெலிதாக ஒலிக்கும் இசையைக் கேட்டுக்கொண்டே இருப்பது இனிமையான அனுபவம்தான். இந்தக் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால், ‘ஃபோகஸ்மியூசிக்.எப்.எம்' இணையதளம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

ஏனெனில் இது இசை கேட்கும் இணையதளமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தத் தளத்தில் உள்ள மியூசிக் பிளேயரை கிளிக் செய்தால் போதும் மேற்கத்திய இசைப் பாடல் ஒலிக்கத் தொட‌ங்கும். வரிசையாகப் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். நாமும் கேட்டு ரசித்தபடி நமது வேலையில் மூழ்கிருக்கலாம். எப்போதாவது வேறு பாடல் தேவை எனில், அடுத்த பாடலுக்கான பட்டனை கிளிக் செய்துகொள்ளலாம்.

இணையதள முகவரி:>http://focusmusic.fm/

SCROLL FOR NEXT