சீன ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஒன்ப்ளஸ், அதன் புதிய தயாரிப்பான ஒன்ப்ளஸ் 5 மொபைலின் விற்பனையை தொடங்கியுள்ளது.
2013ஆம் வருடம் துவக்கப்பட்ட ஸ்மார்ட்போன் நிறுவனம் ஒன்ப்ளஸ். பீட் லாவ் என்பவர் தொடங்கிய இந்த நிறுவனத்தின் மூலம் இதுவரை 5 மாடல்களில் மட்டுமே மொபைல்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதன் 6-வது தயாரிப்பே ஒன்ப்ளஸ் 5.
ஸ்நாப்ட்ராகன் 835 என்ற உலகின் அதிவேக மேம்பட்ட ப்ராசஸரோடு இந்தியாவில் வெளியாகும் முதல் மொபைல் ஒன்ப்ளஸ் 5. மேலும் இதன் 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்ட கோர் ப்ராசஸரினால் உயர்தர கிராபிக்ஸ் கொண்ட வீடியோக்களை இலகுவாக பார்க்க முடியும், விளையாட்டுகளை எளிதாக விளையாட முடியும். அதிவேகமாக சார்ஜ் ஏறும் டாஷ் சார்ஜ் இதன் இன்னொரு சிறப்பம்சம் ஆகும்.
ஒன்ப்ளஸ் 6, 6ஜிபி ரேம், 64ஜிபி உள்ளட்டக்க மெமரியோடும், 8ஜிபி ரேம், 128 ஜிபி உள்ளடக்க மெமரியோடும் இரு மாடல்களில் கிடைக்கிறது. மிட்நைட் ப்ளாக் மற்றும் ஸ்லேட் க்ரே ஆகிய இரு நிறங்களிலும் கிடைக்கிறது.
7.25 மில்லிமீட்டர் தடிமனில், ஒன்ப்ளஸ் தயாரிப்புகளில் மெல்லிய ஃபோன் என்ற பெருமையையும் ஒன்ப்ளஸ் 5 பெற்றுள்ளது. இதன் கைரேகை ஸ்கானர், மொபைலை 0.2 விநாடிகளில் அன்லாக் செய்யும்.
செவ்வாய்க்கிழமை நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்ப்ளஸ் 5 விற்பனை தொடங்கியது. இந்தியாவில், அமேசான் இணையதளத்தின் மூலம் ஜூன் 22-ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் இதன் விற்பனை தொடங்கும். அடுத்து புது டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு என அடுத்த இரண்டு நாட்களில் முக்கிய நகரங்களில் நேரடி விற்பனை நடக்கும்.
ஒன்ப்ளஸ் 5 - மற்ற அம்சங்கள்
இரட்டை கேமரா: 20 + 16 மெகா பிக்ஸல்
கனெக்டிவிடி: ப்ளூடூத் 5.0 NFC
பவர்: டேஷ் சார்ஜ் 3300 mAh
டிஸ்ப்ளே: 5.5 இன்ச் (1080p Optic Amoled DCI-P3)
விலை - 479 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 30,000)